என்னய்யா சொல்லுறீங்க ஒரு எபிசோட்டுக்கு இத்தனை கோடியா? பிக்பாஸ் தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்

0
என்னய்யா சொல்லுறீங்க ஒரு எபிசோட்டுக்கு இத்தனை கோடியா? பிக்பாஸ் தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்

உலக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து இந்தியா பக்கம் வந்த ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம் என்று பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது தமிழ் உட்பட 5 சீசன்களை எட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த சீசனுக்காக வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. அப்படி இந்தியில் 15 சீசன்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 16 வது சீசனையும் துவங்கவுள்ளதாம். கடந்த சில சீசன்களை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார்.

சில நேரங்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவும் முற்பட்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சல்மான்கானை விடாமல் வறுபுறுத்தி தொகுத்து வழங்க வைத்து வருகிறார்கள். அதற்கு காரணம் சல்மான் கான் தொகுத்து வழங்கும் தனித்துவமான ஆக்டிவிட்டி தான்.

அதற்கென்று ஒரு மார்க்கெட் இருப்பதால் தான் கடந்த சீசனில் அவருக்கு சம்பளமாக 350 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் 16 சீசனுக்காக சல்மான் கான் கிட்டத்தட்ட 1050 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.

அதற்கான வருமான வரி மட்டும் 50 கோடியாம். கடந்த சீசனை விட 16 வது சீசனுக்காக 3 மடங்கு சம்பளத்தை ஏற்றியிருக்கிறார் சல்மான். நிகழ்ச்சியில் எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற பிளானில் தான் இத்தனை கோடி கேட்டுள்ளாரா என்ற கேள்வியும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

No posts to display