விக்ரம் படத்தால கூட முறியடிக்க முடியாத அஜித் பட சாதனை !!! தியேட்டர் நிர்வாகமே கூறிய உண்மை !!

0
விக்ரம் படத்தால கூட முறியடிக்க முடியாத அஜித் பட சாதனை !!!  தியேட்டர் நிர்வாகமே கூறிய உண்மை !!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்து வருகிறது. திரைப்படம் வெளியாகி ஒருமாதம் கூட ஆக உள்ள நிலையில், திரையரங்குகளில் இன்னும் கூட்டம் அலைமோதி வருகிறது. கேஜிஎஃப்-2, RRR உள்ளிட்ட பான் இந்தியா படங்களையே ஓரங்கட்டி விட்டது விக்ரம்.

இப்படி சொல்ல சொல்ல சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல சாதனைகளை, வசூலையும் விக்ரம் படம் பெற்றிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, நடிகர் அஜித் குமாரின் பில்லா 2 படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் Chakri Toleti இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு இதே தினத்தில் வெளியான திரைப்படம் பில்லா 2. இப்படத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு இருந்தது என்றால் இப்படம் உலகளவில் 2500 திரையரங்கிற்கு மேல் வெளியானது. வசூலில் சாதனை படைத்திருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற தவறியது.

இந்நிலையில் பில்லா 2 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் அப்படம் குறித்த பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மாயாஜால் திரையரங்க நிர்வாகம், பில்லா-2 படம் குறித்த வீடியோவுடன் ஒரு சாதனையை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது.

அதாவது, தங்களின் திரையரங்க வரலாற்றில் தற்போது வரை வெளியான படங்களில், முதல் வாரத்தின் இறுதியில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் (112) என்ற சாதனையை இன்று வரை நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா-2 படம்தான் வைத்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

No posts to display