தளபதி ‘வாரிசு’ படத்தில் இணைகிறாரா எஸ் ஜே சூர்யா ? வைரலாகும் மாஸ் தகவல்!

0
தளபதி ‘வாரிசு’ படத்தில் இணைகிறாரா எஸ் ஜே சூர்யா ? வைரலாகும் மாஸ் தகவல்!

விஜய்நடிப்பில், வம்ஷி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா போன்ற பல நட்சத்திரப்பட்டாளங்கள் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளதை அடுத்து, இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்த போஸ்டர்களில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஐதராபாத்தில் சில காட்சிகளைப் படமாக்க படக்குழு ஐதராபாத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் முதல் லுக் வெளியான போது படம் ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்று பதிவுகள் வெளியாகின நிலையில், தற்போது அந்த படத்தின் ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக வாங்கிதான் படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யும் எஸ்.ஜே. சூர்யாவும் நண்பர்கள் மற்றும் மெர்சல் படத்திலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display