இறுதி அஞ்சலியில் பிரதாப் போத்தன் உடலைக்கண்டு கதறி அழுத முன்னாள் மனைவி மகள் !! வைரலாகும் புகைப்படம்

0
இறுதி அஞ்சலியில் பிரதாப் போத்தன் உடலைக்கண்டு கதறி அழுத முன்னாள் மனைவி மகள் !! வைரலாகும் புகைப்படம்

பிரபல முன்னணி நடிகரான பிரதாப் போத்தன் காலமான தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இவரின் மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை ராதிகாவின் முன்னாள் கணவருமான பிரதாப் போத்தன் 70 உடல் நலக் குறைவு காரணமாக சிகிக்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவர் நடித்து இயக்கி இருந்த இளமை கோலம், மூடுபனி, பன்னீர் புஷ் பங்கள், வறுமையின் நிறம் சிவப்பு குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் ஆகிய படங்களின் இவரின் பாத்திரங்கள் பெறும் வரவேற்பை பெற்று தந்தது.

இதுவரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். நடிகை ராதிகாவுக்கு பின் அமலா சத்யநாத் என்பவரை 1990-ம் ஆண்டு மணந்தார்.

ஆனால் 2012ல் இவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தனிமையில் தான் இருந்து வந்துள்ளார்.

இன்று அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இரண்டாவது முன்னாள் மனைவியான அமலா கண்ணீருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடைய மகளும் அஞ்சலி செலுத்திய நிலையில், அவர்கள் கலங்கியது காண்போரை கலங்க வைத்திருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

No posts to display