லிங்குசாமி இயக்கத்தில் உருவான தி வாரியர் படத்தின் முழு விமர்சனம் இதோ !!

0
லிங்குசாமி இயக்கத்தில்  உருவான தி வாரியர் படத்தின் முழு விமர்சனம் இதோ !!

ராம் பொதினேனியின் சமீபத்திய படமான தி வாரியர் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் அதன் பிரகாசமான தருணங்களுடன் ஒரு பொழுதுபோக்கு மாஸ் ஆக்‌ஷன் படமாக தெரிகிறது.என் லிங்குசாமி எழுதி இயக்கிய, போர்வீரன் டோலிவுட்டின் ஆற்றல்மிக்க நட்சத்திரமான ராம் பொதினேனியின் தமிழ் அறிமுகத்தைக் குறிக்கிறது. இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியானது தி வாரியர்.இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ஆதி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

டாக்டர் ராம் தன் அம்மா நதியாவுடன் மதுரைக்கு வருகிறார். அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார்.ஒரு கட்டத்தில் வில்லன் ஆதியின் அடியாள்கள் ஒரு நபரை கொல்ல அவன் உயிரை காப்பாற்றுகிறார் டாக்டர் ராம்.இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை.

டாக்டர் ராமுவை அடித்து ஊரை விட்டு விரட்டுகிறார் ஆதி. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே மதுரைக்கு போலீசாக வருகிறார் ராம்.தான் டாக்டராக இருந்தபோது தன்னால் செய்ய முடியாததை ஒரு போலீசாக செய்து காட்டுகிறார் ஆதி.அதன் பின்னே என்ன ஆனது என்பது மீதி கதை.

தெலுங்கு சினிமாவில் 20 படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது முதல் படம் என்பதால் அறிமுகம் ராம் என்று டைட்டில் கார்டு.

ஆக்ஷன் காட்சியில் அசத்தியிருக்கிறார் ராம்.. ஆனால் ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. ஹீரோயின் கீர்த்தி ரொமான்டிக்கில் தெறிக்கவிட்டு உள்ளார். தன் அழகான க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் நம்மை கட்டி போடுகிறார்.மிரட்டல் வில்லனாக அசத்தியிருக்கிறார் ஆதி. இனி தமிழில் இவருக்கு அதிக வில்லன் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
எம் குமரன் படத்தில் வந்து சென்ற நதியாவை போல இந்த படத்தில் வந்து செல்கிறார் நதியா.ஜெயப்பிரகாஷ், அக்ஷரா கவுடா உள்ளிட்ட சில சில கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன.

நாலு ஃபைட்.. ஹீரோயினுடன் நாலு டூயட் அம்மா சென்டிமென்ட்.. ஆக்சன்.. என கமர்சியல் சினிமாவுக்கு உள்ள அத்தனையும் இந்த படத்தில் வைத்துள்ளார் லிங்குசாமி.

ஒரு கட்டத்தில் டாக்டராக இருந்தவர் திடீரென இரண்டு வருடங்கள் கழித்து போலீஸ் ட்ரையினிங் எடுத்து ஐபிஎஸ் ஆக வருவார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்போது தியேட்டரில் சிலர் சிரிப்பதை நாம் காண முடிகிறது.

ஆனால் ஒன்றை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.. கர்நாடகவில் ஐபிஎஸ் ஆக இருந்தவர் இன்று ஒரு தேசிய கட்சியில் தலைவராக இருக்கிறார்.. பல ரவுடிகள் அரசியல்வாதிகள் ஆகி இருக்கிறார்கள்.. பல நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.. இதுபோல பல மாற்றங்கள் இருக்கும்போது நாம் இதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் உண்மையான சில வாரியர்கள் டாக்டராகவும் காவலர்களாக இருந்துள்ளனர் என்பதை என்ட் கார்டில் போடுகிறார் லிங்குசாமி குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் லிங்கு இயக்கிய ரன் சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களின் கலவை இதில் தெரிகிறது.ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியின் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களுக்கு ஸ்வீட்.காதலர்களை கவரும் சில வசனங்களை வைத்துள்ளார். இரண்டு பைக்ல வேற வேற காபி ஷாப்புக்கு போக போறோமா.??

நதியாவிடம் கீர்த்தி.. ஆன்ட்டி இவங்க உங்க சிஸ்டரா.? என்று கேட்கும் போது இந்த மாதிரி நிறைய பிட்டு பார்த்தாச்சு.. என்கிறார்.
இதுபோல சின்ன சின்ன விஷயங்களை சரியாக வைத்துள்ளார் டைரக்டர். ஆனால் நதியாவை தமிழில் டப்பிங் பேச வைத்திருக்கலாம். அவருக்கு நடிகை ரோகினின் வாய்ஸ் டப்பிங் கொடுத்துள்ளார். அது செட் ஆகவில்லை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம்.. “விசில் சாங் சூப்பர் என்றால் புல்லட் சாங் சூப்பரோ சூப்பர்.. அந்த பாடலுக்கு ஆடாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் சிம்பு குரலில் வேற லெவல் சாங்.
படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து அமைத்துள்ளது.. இது ஒரு நேரடி தமிழ் படமாக ரிலீஸ் செய்துள்ளனர்.. ஆனால் ஹைதராபாத்தை காட்டிவிட்டு மதுரை என்பதெல்லாம் ஓவர் டோஸ்.

என்னதான் இது தமிழ் படமாக காட்டப்பட்டு இருந்தாலும் சில காட்சிகள் ஆந்திரா வாடையே அடிக்கிறது. ஒரு காட்சியில் வில்லன் குருவுக்கு பேனர் வைத்துள்ளனர். அது தமிழில் உள்ளது. ஆனால் சென்ட்ரல் ஜெயில் என்று காட்டும் போது அது தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இது போன்ற விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டார் டைரக்டர். லிங்குசாமி தமிழ் இயக்குனர் என்பதால் தமிழக ரசிகர்களுக்கான காட்சிகளை வைத்திருக்கலாம்.

சமீபத்தில் வெளியான புஷ்பா ஆர் ஆர் ஆர் கே ஜி எஃப் உள்ளிட்ட படங்கள் மற்ற மொழி படங்களாக இருந்தாலும் அது ஒரு தமிழ் படத்தை பார்த்த உணர்வு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆக… தி வாரியார்… ஆந்திரா மசாலா மீல்ஸ்

No posts to display