சொல்லி அடித்த வினோத் !! அஜித் மற்றும் படக்குழு ஹாப்பி மோட் !!ரசிகர்கள் கொண்டாட்டம்

0
சொல்லி அடித்த  வினோத் !! அஜித் மற்றும் படக்குழு ஹாப்பி மோட் !!ரசிகர்கள் கொண்டாட்டம்

எச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அஜித்திற்கு ஜோடியாக ஹூயூமா குரேஷி நடித்திருந்தார். மேலும் பல நட்சத்திரங்களுடன் படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை பெற்றது.

ஆனால் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தை வழக்கம் போல போனிகபூர் தான் தயாரித்திருந்தார். அதிகளவு சண்டை காட்சிகளுடன் அஜித்திற்கே உரித்தான பைக் ரேஸிங் காட்சிகளுடன் படம் விறு விறுப்பாக நகர்ந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி ஓரளவு விமர்சனங்களை பெற்று வந்தாலும் இது என்னுடயை கதை, என் கதையை திருடி படம் எடுத்து விட்டார்கள் என ‘மெட்ரோ’ படத்தின் தயாரிப்பாளர் சார்பில் எச்.வினோத் மீது புகார் எழுந்தது. ஆனாலும் எதற்கும் சளைக்காதவராய் எச்.வினோத் தன் அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மீண்டும் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் மெட்ரோ பட தயாரிப்பாளர்கள் சார்பில் அந்த வழக்கை மீண்டும் திரும்ப பெற்று கொண்டனராம். ஆனாலும் எச்.வினோத் தரப்பில் இதை பற்றி எந்த ஒரு சந்தோஷமும் இல்லையாம். படத்தை திருடி விட்டார்கள் என பெருசா சொன்னவர்கள் இன்று வாபஸ் பெறுகிறோம் என்பதையும் அனைவரிடமும் சொல்ல வேண்டும். ஆனால் சத்தமே இல்லாமல் வாபஸ் பெற்று கொண்டார்கள் என்பதை ஏற்க முடியவில்லை என சின்னதாக வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. எப்படி ஆயினும் ஒரு வித சிக்கலில் இருந்து தப்பி விட்டார் எச்.வினோத்.

No posts to display