பார்த்திபன் படத்தில் ஆடையின்றி நடிக்க காரணமே இதுதான்? நடிகை பிரகிதா வைரலாகும் வீடியோ

0
பார்த்திபன் படத்தில் ஆடையின்றி நடிக்க காரணமே இதுதான்? நடிகை பிரகிதா வைரலாகும் வீடியோ

இயக்குனர் ஆர் பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷார்ட்டில் 90 நிமிடங்கள் எடுக்கப்பட்ட படமான இரவின் நிழல் என்ற படத்தினை எடுத்துள்ளார். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையில் இன்று தியேட்டர்களில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் யூடியூப் புகழ் பவி டீச்சர் என்கிற பிரகிதா. முதல் படத்திலேயே ஒரு காட்சியில் பிரகிதா நடித்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், பிரிகிதா இப்படத்தில் மிகப்பெரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு காட்சியில் பிரிகிதா ஆடையின்றி நிர்வாணமாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரிகிதாவுக்கு ஒரு நல்ல பெயரை கொடுக்கும் என்றும் அப்படியொரு காட்சி இருந்தும் அந்த காட்சி யார் கண்ணுக்கும் உறுத்தலாக இருக்காது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை பிரகிதா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அந்த காட்சியில் ஆடையின்றி நடிக்க எனக்கு பயமாக தான் இருந்தது. அதன்பின் இயக்குனர் பார்த்திபன் அதை புனிதமானது என்பதை கூறி புரிய வைத்தார்.

ஆனால் என்னுடைய பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று நினைத்தேன். அவர்களிடம் கூட பார்த்திபன் சார் தான் கதையை புரிய வைத்து சம்மதம் வாங்கினார் என்று கூறியுள்ளார். நடிக்கும் முதல் படத்திலேயே இப்படியொரு காட்சியில் நடிக்கும் ஒரு தைரியத்தை மக்கள் படத்தினை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

பிரிகிதா கூறிய வீடியோ..

No posts to display