உங்களின் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டில் இவ்வளவு ஆபத்தா? கவனம் தேவை !!

0
உங்களின் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டில் இவ்வளவு ஆபத்தா? கவனம் தேவை !!

உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உணவிற்கு நல்ல மணத்தையும் தரக்கூடியது. சமையலறையில் உள்ள முக்கியமான பொருளான பூண்டு விளங்குகின்றது. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும்.

தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் இருப்பினும் அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில் அதிகளவு பூண்டு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென் என்பதை பார்ப்போம்.பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானது.

பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.

அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம்.

பச்சையாக பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சாப்பிட்டவுடன் தலைவலி ஏற்படாது. ஆனால் அந்த செயல்பாட்டை ஊக்குவிக்கலாம்.

No posts to display