ஒரு நைட்டுக்கு 25 லட்சம் தரேன்…ஒரு நாள் பொண்டாட்டியா இரு!..விஷால் பட நடிகைக்கு ஆஃபர் கொடுத்த தொழிலதிபர் !!

0
ஒரு நைட்டுக்கு 25 லட்சம் தரேன்…ஒரு நாள் பொண்டாட்டியா இரு!..விஷால் பட நடிகைக்கு ஆஃபர் கொடுத்த தொழிலதிபர் !!

பிரபல பாலிவுட் நடிகை நீது சந்திரா “கரம் மசாலா” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், அதில் அவர் விமானப் பணிப்பெண்ணாக நடித்து அதன்பிறகு ட்ராஃபிக் சிக்னல், ஒன் டூ த்ரீ, ஓயே லக்கி லக்கி ஓயே போன்ற பல படங்களில் நடித்தார்.

மாதவனின் ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த அவர் ஜெயம் ரவியின் ஆதி பகவன், விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சில தமிழ் படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

மேலும், இதில் ஓயே லக்கி லக்கி ஓயே சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நீது, இது போல், 13 தேசிய விருது பெற்ற இவ்வளவு பெரிய படங்களில் நடித்த எனக்கு இன்று பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ஒரு பெரிய தொழிலதிபர் எனக்கு மாதம் ₹25 லட்சம் தருவதாகவும், நான் அவருடைய சம்பளத்துக்கு மனைவியாக வேண்டும் என்றும் கூறினார். என்னிடம் பணமும் இல்லை, பட வாய்ப்புகளும் இல்லை என நான் கவலைப்பட்டேன், இவ்வளவு வேலை செய்த பிறகு நான் இங்கு தேவையற்றவளாக உணர்கிறேன் என உருக்கமுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

No posts to display