நயன்தாரா செய்த நரித்தனத்தால் அஜித்திடம் செம்ம டோஸ் வாங்கப்போகும் விக்னேஷ் சிவன் !! கடுப்பில் ரசிகர்கள்

0
நயன்தாரா செய்த நரித்தனத்தால் அஜித்திடம் செம்ம டோஸ் வாங்கப்போகும் விக்னேஷ் சிவன் !! கடுப்பில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணியாக இருக்கும் நயன்தாரா தற்பொழுது பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதன்படி இவரது 75-வது திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவரிடம் நயன்தாரா கதை கேட்டு உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.

இந்த படத்திற்கான அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு “அன்னபூரணி” என தலைப்பு வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது. இதனையடுத்து இந்த படத்தின் கதை சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஓர் பெண் சமையல் செய்து மிகப்பெரிய ஹோட்டல் நடத்தி சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது தான் கதையாம்.

இதைப்போல் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க உள்ள “ஏகே 62” படத்தின் சாதாரணமான ஒரு மனிதன் சிறு ஹோட்டல் தொடங்கி மிகப்பெரிய ஹோட்டல் நடத்தி சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் கதை அமைத்து இருந்தாராம்.

அதே கதையை எப்படி விக்னேஷ் சிவன் அஜித்திடம் கூறினார்? ஏதேனும் கோல்மால் நடந்துள்ளதா? கதையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் காப்பி அடிக்கும் அட்லீக்கே விக்னேஷ் சிவன் டஃப் கொடுத்து விடுவார் போலயே என கலாய்த்து வருகிறார்கள்.

No posts to display