புற்றுநோயால் பிரபல இளம் நடிகர் உயரிழிப்பு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!..

0
புற்றுநோயால்  பிரபல இளம் நடிகர்  உயரிழிப்பு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!..

இளம் நடிகர் கிஷோர் தாஸ்(30) புற்றுநோயால் உயிரிழந்தார். அசாம் திரையுலகில் பிரபல நடிகராக வலம்வந்தவர் கிஷோர் தாஸ் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக விளங்கினார். நடிகர் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கவஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னை வந்தார்.

சிகிச்சை பெற்று வந்தபோது கிஷோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் பாதிப்பு காரணமாக கிஷோர் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி அசாமி திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிஷோர் தாஸின் உடலை அசாமுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாநில முதல்வர் தமிழக அரசை கேட்டுக்கொண்டதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது நடக்கவில்லை என்றும் அசாம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதனால் கிஷோர் தாஸின் இறுதிச் சடங்குகள் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.

No posts to display