இனிமேல் இப்படித்தான் அஜித் எடுத்த அதிரடி முடிவால் கடும் அப்செட்டில் ரசிகர்கள்

0
இனிமேல் இப்படித்தான் அஜித் எடுத்த அதிரடி முடிவால் கடும் அப்செட்டில் ரசிகர்கள்

அஜித் தற்போது எச் வினோத் குமார் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். போனி கபூர் தயாரித்த, படத்தின் கதை ஒரு வங்கி திருட்டைச் சுற்றி வருகிறது மற்றும் பெண் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ‘ஏகே 61’ நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மூன்றாவது கூட்டணியைக் குறிக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் அஜித் குமார், சினிமாவில் எந்த ஒரு பின்புலம் இல்லாமல் தனி ஒருவனாக தன்னுடைய விடா முயற்சியிலும் தன்னம்பிக்கையிலும் வெற்றி பெற்றவர் நடிகர் அஜித்குமார். ஆரம்ப கட்டத்தில் காதல் மன்னனாக காதல் கதைகளில் நடித்து வந்த அஜித், அமர்க்களம் படத்திற்கு பின்பு தான் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார்.

இதன் பின்பு தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்த வந்த அஜித்குமார், தீனா படத்தில் இருந்து தல என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். என்னுடைய படம் நல்லா இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடையும், அதனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதில் இன்று வரை உறுதியாக இருக்கிறார் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்து, தனது ரசிகர்கள் அவரவர் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அக்கைறையாக இருந்தவர்.

இருந்தும் அவர் ரசிகர் மன்றகளை கலைத்த பின்பு தான் அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர். இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிக்கிறார், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் சுற்று பயணம் செய்துள்ள அஜித் புகைப்படம் அவ்வப்போது வெளியாகியுள்ளது.

தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஜூலை இறுதியில் இந்தியா வரும் அஜித் குமார், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக புனே செல்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடந்த வேண்டாம் என்று அஜித் கண்டிஷன் போடுவதால், தொடர்ந்து அவரது படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது, தமிழ்நாடே வேண்டாம் என அஜித் எடுத்த அதிரடி முடிவின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அஜித் எங்கே படப்பிடிப்பு நடத்தினாலும், அந்த இடத்தை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதாகவும், மேலும் அஜித் படப்பிடிப்பு முடிந்து வெளியில் வரும் வரை காத்திருக்கும் அவரது ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு அஜித் செல்லும் வரை அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து பைக் ஒட்டி கொண்டே செல்பி எடுப்பது போன்று ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு வந்தது அஜித்தை வ்ருத்தம் அடைய செய்துள்ளது.

இதன் காரணமாக தான் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடந்த வேண்டாம் என புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே அஜித் கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது. ஆனால் அஜித் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்ப்பதால், பெரும்பாலான தமிழ் சினிமா துறையை சேர்ந்த ஊழியர்கள் வேலையின்றி பாதிக்கப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘ஏகே 61’ படத்தைத் தொடர்ந்து அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

No posts to display