நெட்டில் கசிந்த வாரிசு படத்தின் சண்டை காட்சி லீக் !! வைரலாகும் வீடியோ

0
நெட்டில் கசிந்த வாரிசு  படத்தின் சண்டை காட்சி லீக் !! வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்குப் பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த செய்தி அதிகாரப் பூர்வமாக வெளியான நாள் முதல் விஜய் ரசிகர்கள் #தளபதி66 என்ற ஹேஷ்டேகினைக் கொண்டு டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமினை நிரப்பிட ஆரம்பித்தனர். நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.இப்படத்தின் போஸ்டரில் “ தி பாஸ் ரிட்டர்ன்ஸ்” எனும் டேக் லைன் இருந்தது. போஸ்டரில் நடிகர் விஜய் க்ரே நிற சூட்டில் செம மாஸாக இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பவ்வியமாக விஜய் நடந்து செல்லும் வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்தனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் விமான பயணம் மேற்கொண்டு இருக்கலாம் என பதிவு செய்தனர். கில்லி படத்துக்கு பிறகு பிரகாஷ்ராஜும் விஜயோடு சேர்ந்து இப்படத்தில் நடித்து வருகிறார். 2002-ஆம் ஆண்டில் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான “ஆல் தோட்ட பூபதி” பாடலை ரீமிக்ஸ் செய்ய ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் முடிவு செய்த தகவலும் வெளியானது.

இதனையடுத்து ட்விட்டரில் “வாரிசு” படப்பிடிப்பு காட்சி வெளியானதாக ” #Beast “எனும் ஹாஷ் டாக் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டின் கமெண்ட் செக்‌ஷனில் சிலர் “இன்னுமா இதையெல்லாம் நம்புறீங்க, இது கீதா கோவிந்தம் படத்தின் ஷூட்.” என்று கூறியுள்ளனர். #Beast -ன் ட்விட்டர் ஸ்க்ராலில் அரபிக் குத்து (Arabic kuthu) பாடல் 2 மில்லியன் லைக் பெற்றதனால் அதுவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தின் புது லுக் இணையத்தில் வைரலாகி வர நடிகர் விஜயின் நடிகர்களும் #Beast எனும் ஹாஷ் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

No posts to display