அடப்பாவமே இது என்னடா விக்ரம் பட ரோலக்ஸ்-க்கு வந்த சோதனை? சல்லி சல்லியா நொறிக்கிட்டாங்களே

0
அடப்பாவமே இது என்னடா விக்ரம் பட ரோலக்ஸ்-க்கு வந்த சோதனை? சல்லி சல்லியா நொறிக்கிட்டாங்களே

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிய படம் விக்ரம். பிரம்மாண்ட முறையில் மல்டிவெர்ஷன் படமாக ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியானது. விஜய்சேதுபதி, பகத் பாசில், சிறப்பு கதாபாத்திரத்தில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகிய முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் பெற்றது. தமிழ் திரையுலகில் வெளியான விஜய், அஜித் படங்களின் வசூலை துவம்சம் செய்து வசூல் மன்னனாக முதல் முறையாக கமல் ஹாசன் திகழ்ந்துள்ளார்.

இதையடுத்து தற்போது உலகம் முழுவதும் 440 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தின் காட்சிகல் மற்ற படத்தை வைத்து மீம் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருவதுண்டு.

அதேபோல் கடைசி சில நிமிடங்கள் மட்டும் நடித்த ரோலக்ஸ் சூர்யா கதாபாத்திரத்தையும் இணையத்தில் புகழ்ந்தும் கலாய்த்தும் ட்ரோல் பகிர்வுகள் வைரலாகி வருகிறது.

ஆனால் தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வடிவேலு டயலாக் காட்சியை வைத்த ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருவதை ரோலக்ஸ்-க்கே இந்த நிலைமையா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

No posts to display