திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் 75 வது படத்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?

0
திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் 75 வது படத்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதால் இந்த படம் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘ராஜா ராணி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை முதலில் மதன் தயாரிப்பதாக இருந்த நிலையில், நயன் தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் என்பதால் டிரைடன் ரவி இப்படத்தின் கதையைக் கேட்டு, ஜீ ஸ்டுடியோவுக்கு தகவல் சொல்லி, அவர்களே முன்பணமாக ரூபா 20 கோடி கொடுத்து இப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அன்னப்பூரணி எனப் பெயர் வைக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

No posts to display