பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் விமர்சனம் இதோ !!

0
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் விமர்சனம் இதோ !!

பார்த்திபன் படத்தில் நீங்கள் எப்போதும் உறுதியாக இருக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது ஒருபோதும் சோம்பேறித்தனமான, சிந்தனையற்ற முயற்சியாக இருக்காது. உண்மையில், அதிகப்படியான கருத்துக்கள் அவரது படங்களின் வரையறுக்கும் பண்பு. தனது பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான தேடலானது அவரது திரைப்படங்களை எதிர்நோக்கக்கூடியதாக ஆக்குகிறது (கொடித்த இடங்களை நிரப்புக போன்ற அவரது தோல்வியுற்ற சோதனைகள், அவர் புகைபிடிக்கும் குணம் கொண்டதாக இருந்ததால், சிறிது பயம்).

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது சினிமா. சிந்திக்க வைத்த சினிமாவை படித்து புதிய பாதை அமைத்த பார்த்திபனின் புதிய படைப்பு தான் இந்த இரவின் நிழல்.

உலகிலேயே முதல் முறையாக சிங்கிள் ஷாட் நான் லீனியர் படத்தை இயக்கி சினிமா வரலாற்றில் தனது படத்தை பாடமாக மாற்றி உள்ளார். அவரது இந்த வித்தியாச, விசித்திர கலை முயற்சி எப்படி இருக்கிறது, வணிக ரீதியாக அவருக்கு எந்தளவுக்கு கை கொடுக்கும், ஏற்கனவே விருதுகளை வாங்கத் தொடங்கிய நிலையில், இன்னும் அதன் எல்லை எதுவரை செல்லும், சினிமா ரசிகராக தியேட்டரில் வரும் ஜூலை 15ம் தேதி படம் வெளியாகும் போது என்ன விதமான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்..

சினிமா ஃபனான்ஸியரான நந்து ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள போலிச் சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாட அங்கே நந்துவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் சொந்தக் காலில் நிற்க எத்தனை பாவங்களை செய்ய வேண்டி இருக்கு, தான் செய்த குற்றங்களையும் தனது வாழ்க்கையும் இதே சிங்கிள் ஷாட் படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என மாற்றி மாற்றி பிளாஷ்பேக்குக்குள் பிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் எந்தவொரு கட்டும் இல்லாமல் வைத்து அதனை பார்வையாளருக்கு கடத்தி இருக்கும் விதம் நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள், அவனுக்கு செய்யும் நல்லது, கெட்டது கடைசியில் நந்துவுக்கு என்ன நடக்கிறது என்பது தான் இரவின் நிழல் படத்தின் கதை.

சினிமாவை பார்த்து விட்டு டிராமா மாதிரி இருக்குப்பா, அப்படி பண்ணியிருக்கலாம், இப்படி பண்ணியிருக்கலாம், அங்கே குறை, இதில் ஓட்டை என சொல்பவர்களின் வாயையும் அடைக்க வேண்டும் என நினைத்த பார்த்திபன் படம் போடுவதற்கு முன்னதாக 30 நிமிடங்கள் அந்த படத்தை எப்படி வியர்வையும், ரத்தத்தையும் சிந்தி எடுத்திருக்கிறோம் என்கிற மேக்கிங் வீடியோவை போட்டே அப்ளாஸ் அள்ளி விடுகிறார். 96 நிமிட சிங்கிள் ஷாட் வீடியோ ஒரே முயற்சியில் எடுத்து நானும் புது முயற்சி செய்து விட்டேன். பார்த்த் விட்டு பாராட்டுங்கள் என பார்த்திபன் சொல்லவில்லை. அந்த ஒரு 96 நிமிட சிங்கிள் ஷாட்டுக்காக 23 முறை 96 நிமிடங்கள் நடித்து இயக்கி இருக்கிறார். அவர் மட்டுமில்லை, படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே உழைப்பை சினிமா எனும் கலைக்காக செய்துள்ளது நிச்சயம் பாராட்டுக்களை அள்ளுகிறது.

உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க ஒப்பந்த செய்த நிலையில், அவரும் சும்மா வந்து மியூசிக் போட்டு விட்டு போகவில்லை. ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்கு ஆஸ்கர் வாங்க எந்தளவுக்கு உழைப்பை போட்டாரோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் உழைப்பை கொட்டியிருக்கிறார். இசையை வைத்து ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு ரசிகர்களை கடத்த முடியும் என்றும், ஃபிளாஷ்பேக் போர்ஷன்களுக்கு அந்த இசை போதும் என்றும் ஓடிக் கொண்டே இருக்கும் கேமராக்கள் மட்டும் ஒரே இடத்தில் பல செட் போட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது என்கிற அனைத்தையும் மறக்கடிக்கும் மேஜிக்கை செய்து இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

96 நிமிட சிங்கிள் ஷாட் படம் என்றால் ஒட்டுமொத்த தலைவலியும் கேமரா டிபார்ட்மென்ட் மீதுதான் இருக்கும். அனைத்து செட்களிலும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் ஃபோகஸ் புல்லர் சொதப்பினால் கூட ஃபோகஸ் போய் விட்டால் மீண்டும் ஒரு டேக் எடுக்க வேண்டிய நிலை தான். சுந்தர புருஷன், வானத்தைப் போல, அவன் இவன், அன்பே சிவம், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் மற்றும் அவரது டீம் தான் இரவின் நிழல் எனும் இப்படியொரு கலைப் படைப்பை நம் கண் முன்னே காட்சிப்படுத்தி உள்ளது. அந்த டீமை சரியான முறையில் வழி நடத்தி இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

பார்த்திபனின் மூளை தான் இத்தனை பெரிய படைப்பு சாத்தியமாக காரணமே. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா என படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே ஒரு முறை கூட படத்தை விட்டு வெளியேறி விடாமல் எத்தனை ரீ ஷுட் நடத்தினாலும் நடித்துக் கொடுத்தது பெரிய விஷயம். ஒளிப்பதிவு, இசை, லைட்டிங் என அனைத்துமே இரவின் நிழலுக்கு கிடைத்திருக்கும் பலம் தான். சர்வதேச அளவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கும், தொட முடியாத உயரங்களுக்கும் இரவின் நிழல் பார்த்திபனை சுமந்து செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அத்தனை உழைப்பையும் மனுஷன் போட்டிருக்கிறார். “சிரிப்பால அடிச்சதுக்கு பதில் செருப்பாலயே அடிச்சிருக்கலாம்” என பார்த்திபன் எழுதித் தள்ளி உள்ள வசனங்களும், காட்சிகளும், இத்தனை பெரிய முயற்சியை சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்ததும் பெருமைக்குரிய விஷயங்கள்.

ஒரு மனிதனின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் என்கிற ஒற்றை வரியில் திரைக்கதை இருப்பது பல படங்களில் பார்த்து விட்டதால், கதைக்காக இந்த படத்தை பார்க்க முடியாதது மிகப்பெரிய மைனஸ் ஆகவே தெரிகிறது. ஆனால், கலைக்காக மட்டும் தான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது சினிமா விரும்பிகளின் ஆசை. கமர்ஷியல் ரீதியாக ஒத்த செருப்பு படத்துக்கு நேர்ந்த நிலைமை தான் இந்த படத்துக்கும் நேர்ந்து விடுமோ என்கிற அச்சம் காரணமாக மேக்கிங்கை முதலிலேயே வைத்ததும் ஒரு நெகட்டிவாகவே மாறி இருக்கிறது. டிராமாத்தனம், கெட்ட வார்த்தைகள், பாலியல் கொடுமை காட்சியில் கூட அந்த எமோஷனலை உணர்வதற்குள் அடுத்த காட்சிக்கு ஓடிவிடும் கேமரா நகர்வு உள்ளிட்டவை மட்டுமே இந்த படத்திற்கு சில பாதிப்புகளை கொடுக்கின்றன. நெகட்டிவ் என்ன தான் இருந்தாலும், இப்படியொரு முயற்சியை சினிமா ரசிகர்கள் கொண்டாடினால், உலகத் தரத்திற்கான படைப்புகளை நம்ம ஆட்களும் தைரியமாக இங்கே இயக்க முன் வருவார்கள்.. இரவின் நிழல் – ரசிகர்கள் கையில்!

No posts to display