கண்களுக்கு மேல் உள்ள புருவங்களை அடர்த்தியாக வளர செய்ய வேண்டுமா? சில அழகு குறிப்புக்கள் உங்களுக்காக!

0
கண்களுக்கு மேல் உள்ள புருவங்களை அடர்த்தியாக வளர செய்ய வேண்டுமா? சில அழகு குறிப்புக்கள் உங்களுக்காக!

பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது.

அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர்.

இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில அழகுகுறிப்புகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.

தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.

முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15- 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் காண முடியும்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

No posts to display