விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

0
விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று ‘கொலை’. அவர் தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருவதோடு அவரே இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இருக்க அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘கொலை’ திரைப்படத்தின் விவகாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் படக்குழுவினர் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

கொலை படத்தை ‘விடியும் முன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான ‘திங் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

No posts to display