அப்பவே விஜய்யை விட 10 மடங்கு அதிகம் பெற்ற அஜித்.. பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

0
அப்பவே விஜய்யை விட 10 மடங்கு அதிகம் பெற்ற அஜித்.. பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய் மற்றும் அஜீத் இருவருக்கும் தான் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கின்றனர். அதன் காரணமாகவே இவர்களுடைய படம் ரிலீஸ் ஆனால் திரையரங்கில் அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது பல கோடி சம்பளம் வாங்கி உச்ச நாயகர்களாக சினிமா துறையில் இன்று அசைக்க முடியாதவர்களாக மாறி உள்ளனர். மேலும் தல அஜித் கதாநாயகனாக கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் நடிப்பதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் வீடு என் கணவர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘என் கண்மணி’ என்ற பாடலில் பள்ளி மாணவனாக தல அஜித் நடித்ததுதான் இவர் திரையில் தோன்றிய முதல் படமாகும். எனவே இவர் அமராவதி படத்தில் வாங்கிய சம்பளம் ரூபாய் 5000.

ஆனால் விஜய்யோ தன் நடிப்பில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த முதல் படமாக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் வாங்கிய சம்பளம் வெறும் 500 தானாம். அஜித்துடன் ஒப்பிடும்போது விஜய் உடைய ஆரம்பகால படங்களெல்லாம் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை.

இருப்பினும் விஜய் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டே இருந்ததால், அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து தற்போது தல அஜித்துக்கு போட்டியாக நிற்கிறார்.

தல அஜித் நடித்த ஒவ்வொரு படமும் அவருக்கு வெற்றி படமாகவே இருந்ததனால் முதல் படத்திலேயே விஜயை விட 10 மடங்கு சம்பளம் வாங்கியது தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சும்மாவே அடித்துக்கொள்ளும் தல தளபதி ரசிகர்கள் இந்தத் தகவலை வைத்துக்கொண்டு பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

No posts to display