கமல் முதல் கார்த்தி வரை அஜித்தை ஃபாலோ செய்யும் தமிழ் ஹீரோக்கள்!! நீங்களே பாருங்க புரியும்

0
கமல் முதல் கார்த்தி  வரை அஜித்தை ஃபாலோ செய்யும் தமிழ் ஹீரோக்கள்!! நீங்களே பாருங்க புரியும்

கடந்த சில வருடங்களாக அதாவது, இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்ததில் இருந்தே, அஜித்தின் படங்களின் பெயர்கள் ‘வி’யில் தொடங்குகின்றன. அது இன்று வரை மாறாமல் இந்த ‘வி’ ஃபார்முலா அப்படியே உள்ளது. அதன்படி, அந்த ஃபார்முலா வணிக ரீதியாக வெற்றி பெற்றதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ‘வி’ என்று தொடங்கும் தலைப்பை வைக்கிறார்களா என்று தெரியவில்லை.

நேர்கொண்ட பார்வை இருந்தாலும், ‘வீரம்’ படத்தில் தொடங்கி விவேகம், விஸ்வாசம் மற்றும் வேதாளம் இறுதியாக ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தப்பட்டது. அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது, அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், தற்காலிகமாக அந்த படத்திற்கு ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கும் ‘வி’ என்று தொடங்கும் தலைப்பாக இருக்கலாம் என பல யுகங்கள் எழுந்து வண்ணம் உள்ளது. இதே போல தான் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த வகையில், இந்த ‘வி’ ஃபார்முலா தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தளபதி விஜய் நடிக்கும் 66-வது படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் விருமன் திரைப்படமும் நேற்று வெளியான சூர்யாவின் ‘வணங்கான்’ படமும் அடங்கும்.

No posts to display