லோகேஷ் இயக்கும் தளபதி 67 டைட்டில் இதுவா !!! வைரலாகும் தகவல் இதோ

0
லோகேஷ் இயக்கும் தளபதி 67 டைட்டில் இதுவா !!! வைரலாகும் தகவல் இதோ

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே வாரிசு என்ற டைட்டிலுக்கு கிடைத்தது.

மேலும் வழக்கமான விஜய் படங்களில் இருக்கும் மாஸான டைட்டில் இப்படத்தில் இல்லை என்பதே பொதுவான குறையாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் வழக்கமான விஜய் படமாக இருக்காது என்றும், எமோஷனல் கலந்த குடும்ப கதைக்கருவை கொண்ட படமாக இருக்கும் என்பதாலும் மாஸான டைட்டில் செட் ஆகாது என சில விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இதைத்தொடர்ந்து வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அத்தோடு மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணையவுள்ளதால் ரசிகர்கள் ஆவலாக இப்படத்தை எதிர்பார்க்கின்றனர். மேலும் லோகேஷின் சமீபத்திய படமான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

thalapathy 67
இதைத்தொடர்ந்து இவர்கள் இணையும் தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமென்றும், இப்படத்தில் விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாகவும் இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

thalapathy 67

இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி மேலும் ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது தளபதி 67 படத்திற்கு ‘ நான் வாழும் உலகம் ‘ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

thalapathy 67

மேலும் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான எடிட்டர் பிலோமின் ராஜின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவர் தளபதி 67 படத்தில் அடுத்து பணியாற்றப்போவதாகவும், அப்படத்தின் பெயர் நான் வாழும் உலகம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகின்றது.

No posts to display