இந்த திருமணத்தால் தான் சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை வந்ததா ? வசமாய் சிக்கும் பிரபு

0
இந்த திருமணத்தால் தான் சிவாஜி குடும்பத்தில்  சொத்து பிரச்சனை வந்ததா ? வசமாய் சிக்கும் பிரபு

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். இவர் விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. தனது உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை 1952 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மணந்தார். பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் சீர்திருத்த முறைப்படி திருக்குறள் பாடப்பட்டு எளிமையாக நடந்தது. இவர்களது மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர் ஆவர். இவரது மகன் பிரபு புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மேலும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 2011 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக ஒரு சலசலப்பு அவரது குடும்பத்தில் ஏற்படத்துள்ளது. அதன்படி அவருடைய சகோதரிகள் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக தொடர்ந்து இருக்கும் வழக்கு வைரலாகி வருகிதறது.

அந்த வகையில் சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு 271 ஒரு கோடி ஆகும். சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜி கணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, சிவாஜி குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரே குடும்பத்திலிருந்து பெண் அல்லது மாப்பிள்ளை எடுக்கிற பழக்கம் இருந்தது. அதேபோல சிவாஜி மகள்கள் இஇருவருமே அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துகொண்டார்கள். சிவாஜியின் மறைவுக்கு பிறகு சில ஆண்டுகள் இந்த குடும்பம் பிரச்சினையை வெளிக்காட்டாமல் அவர்களுக்குள்ளேயே முனகிக் கொண்டு இருந்தார்கள்.

அதன்படி சிவாஜியின் சில சொத்துக்களை விற்று சில சொத்துக்களை மாற்றியது போன்ற நிகழ்வுகளால் தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. பிரபு சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக பிரபு தன்னுடைய மகளை தன்னுடைய சகோதரியின் மகனுக்கு கட்டிக் கொடுத்தார். ஆனால், இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றனர். எனவே இந்த விவாகரத்து பிரச்சனை தான் சொத்து தகராறுக்கு காரணம் என்று தற்போது கூறப்படுகிறது.

No posts to display