கோலிவுட்டில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவரா? நயன்தாராவை ஓரங்கட்ட போகும் 90ஸ் கனவுக்கன்னி!

0
கோலிவுட்டில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவரா? நயன்தாராவை ஓரங்கட்ட போகும் 90ஸ் கனவுக்கன்னி!

நயன்தாரா திருமணமாகி செட்டிலான நிலையில் அவரது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிரபல நடிகை ஒருவர் தட்டிப்பறிக்க உள்ள செய்தி வெளியாகி உள்ளது. நயன்தாரா கடந்த மாதம் இயக்குனர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார்.

திருமணத்தின் முன்பாகவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதுவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா வயதான தோற்றத்தில் உள்ளார் என நெட்டிசன்கள் உள்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வந்தனர். மேலும் நயன்தாராவை விட சமந்தாவே அழகாக இருந்தார் எனவும் அப்படத்தை பார்த்த பலரும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்ததையடுத்து நயன்தாராவிற்கு மார்க்கெட் சற்று குறைவாகத்தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனிடையே சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலானது.

இந்த டீசரில் ஐஸ்வர்யாராயும் திரிஷாவும் நேருக்கு நேர் சந்திக்கும் விதமாக அமைந்தது. மேலும் திரிஷா இளமையான முக தோற்றத்தில் காணப்பட்டதையடுத்து பலரும் இத்திரைப்படத்தில் திரிஷாவை பார்க்க ஆவலோடு உள்ளனர்.

vigneshivannayanthara

இதனிடையே இப்படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு கண்டிப்பாக மார்க்கெட் உயரும் என்பதால் திரிஷா நயன்தாராவிற்கு அடுத்தபடியாக லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிச் செல்வார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். திரிஷா, நயன்தாராவிற்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் களமிறங்கி கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நயன்தாரா கவர்ச்சியை காட்டி அதிக படங்களில் நடித்து கவர்ந்து இருந்தார்.

இதனிடையே திரிஷா அண்மையில் மார்க்கெட் இல்லாமல் இருந்ததையடுத்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரிஷா பெறுவார் என அவரது ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No posts to display