Friday, March 29, 2024 6:34 pm

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பற்றிய அப்டேட் இதோ!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஷால் நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படம் உருவாகும் நிலையில், இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி வந்த நிலையில், இயக்குனர் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக அமைக்கப்படும் செட்டில் இருந்து புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்திருந்தார். கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், விஷால், மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விஷால் ‘லத்தி’ படத்தில் கவனம் செலுத்தியதால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற கேங்ஸ்டராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்