நீங்கள் வேகமாக உங்க எடையை குறைக்க நெனச்சா ? இந்த ஒரு டீயை போட்டு குடிங்க!

0
நீங்கள் வேகமாக உங்க எடையை குறைக்க நெனச்சா ? இந்த ஒரு  டீயை போட்டு குடிங்க!

அதிக சக்தி கொண்ட பூண்டை கொண்டு தயாரித்த தேநீர் குடிப்பது உடல் எடையை குறைப்பதில் நல்ல பங்கு அளிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதைப்பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

இந்த பூண்டு தேநீரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம் என்று வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

உங்களது பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே அவ்வப்போது இந்த பூண்டு தேநீரை பருக வேண்டியது அவசியமாக இருக்கிறது.

நிச்சயமாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இதை தயாரிப்பது மிகவும் சுலபம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை கொதிக்க விடவேண்டும்.

பின்பு மூன்று முதல் நான்கு துண்டுகள் வரை பூண்டை அதில் போட வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் தேநீர் செய்ய தேவைப்படும் தண்ணீராக இருந்தால் போதும். பின்பு அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நன்றாக கொதிக்க விட வேண்டும். ஆறிய பிறகு இறக்கிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.அவ்வளவுதான் இதை தினமும் நாம் ஒரு நேரம் அல்லது இரண்டு நேரம் குடித்தால் உடல் எடையை குறைப்பதற்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும் இந்த பூண்டை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறுகிறார்கள். பூண்டு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

எனவே அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

No posts to display