அடம் பிடித்த குழந்தைக்காக அஜித் கொடுத்த கிபிட் என்ன தெரியுமா ? !! நீங்களே பாருங்க

0
அடம் பிடித்த குழந்தைக்காக அஜித் கொடுத்த கிபிட் என்ன தெரியுமா ? !! நீங்களே பாருங்க

அஜித் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து ‘ஏகே 61’ படத்தில் பணிபுரிந்து வருகிறார், மேலும் இது ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு இந்த ஜோடியின் மூன்றாவது தொடர்ச்சியான ஒத்துழைப்பைக் குறிக்கிறது. அஜித்தின் ரசிகர்களுடனான சிறப்பு தொடர்பு அனைவருக்கும் தெரியும், மேலும் நடிகர் அவர்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்கிறார்.பிரான்ஸ் நாட்டில் அஜித் தனது ரசிகர்களுடன் ஈபிள் கோபுரம் அருகில் இருக்கும் புகைப்படம் & வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் BMW பைக்கை எடுத்துக்கொண்டு அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கி பெல்ஜியம் வழியாக இந்த பயணம் தற்போது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

பின்னர் நடிகர் அஜித் லண்டன் நகரில் ஒரு குழந்தையை கையில் ஏந்திய நிலையில் உள்ள புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்துக்கு பின்னணியில் அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் காணப்பட்டனர். ஐரோப்பாவில் தற்போது அஜித் குடும்பத்தினர் உடன் நேரம் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று நடிகர் அஜித் குமார், மார்க் கவெண்ட்ரி எனும் ஸ்போர்ட்ஸ் சூப்பர் பைக் ஷோ ரூம் உரிமையாளருடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த மார்க் கவெண்ட்ரி தான் இந்த ஐரோப்பிய பயணத்தில் அஜித் குமார் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் ஆவார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்குமார், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அஜித்தை அடையாளம் கண்டு கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு ரசிகர் தனது ஆடையில் அஜித்திடம் ஆட்டோகிராப் கையெழுத்திட கேட்டுக்கொண்டார். அஜித்தும் அந்த ரசிகருக்கு ஆட்டோகிராப் வழங்கினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் ஐரோப்பாவில் தற்போது நடைபெற்று வரும் கால்பந்து போட்டியின் முக்கிய அணியான பார்சிலோனா அணியின் ஜெர்ஸியில் தான் அஜித் ஆட்டோகிராப் கையெழுத்திட்டார். இந்த புகைப்படங்கள் & வீடியோவை அந்த ரசிகர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் ஈபிள் டவர் அருகில் ஒரு சிறுமியிடம் தரையில் அமர்ந்து அஜித் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

No posts to display