பெருத்த தொகை கொடுத்து ‘தி லெஜண்ட்’ படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

0
பெருத்த தொகை கொடுத்து ‘தி லெஜண்ட்’ படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில் இந்த படத்தை சர்வதேச அளவிலான ரிலீஸ் உரிமையை API பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தவிர்ந்து மற்ற அனைத்து நாடுகளிலும் API பிலிம்ஸ் நிறுவனம் ‘தி லெஜண்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் இப்படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No posts to display