’எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராம ராஜன் ஹீரோயினாக நடித்த நடிகை யா இது !!

0
’எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராம ராஜன்  ஹீரோயினாக நடித்த நடிகை யா  இது !!

நடிகர் ராமராஜன் படத்தில் அறிமுகமாகி அதன் பின் பிரபல நடிகையாக இருந்த ஒருவரின் மகன்களின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இந்த நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருவதோடு அதற்கு லைக்ஸ்களை இட்டு வருகின்றனர்.

நடிகர் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’எங்க ஊரு பாட்டுக்காரன்’. மேலும் இந்த படத்தில் தான் நடிகை நிஷாந்தி தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் பிரபல நடிகையாக இருந்த பானுப்ரியாவின் சகோதரி ஆவார்.

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானதால் அதன்பிறகு நிஷாந்தி பல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகர் சித்தார்த் ரே என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை நிஷாந்திக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ஆம் ஆண்டு நிஷாந்தியின் கணவர் சித்தார்த் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரையுலகில் இருந்து விலகிய நிஷாந்தி சில தொலைக்காட்சி தொடர்களில் மட்டும் நடித்தார். மேலும் இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகை நிஷாந்தி சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் மகன்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நிஷாந்திக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

No posts to display