இரண்டு வார முடிவில் அருண் விஜய்யின் யானை படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா ?

0
இரண்டு வார முடிவில் அருண் விஜய்யின் யானை படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா ?

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “முறை மாப்பிள்ளை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகித் தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். அறிமுக படத்தை தொடர்ந்து தனது திரையுலக வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து ‘பிரியம், இயற்கை, பாண்டவர் பூமி, கங்கா கௌரி’ எனப் பல படங்களில் நடித்திருந்தார்.

எனினும் இப்படங்கள் யாவற்றையும் விட தல அஜித் உடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்த ‘என்னை அறிந்தால்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்ததோடு அஜித் ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் அவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் யானை படம் வெளிவந்து இரண்டு வாரம் ஆகிய நிலையிலும் படத்திற்கு நல்ல வசூல் என கூறப்படுகின்றது.

இரண்டு வாரத்திலும் இப்படத்திற்கு நல்ல வசூல் வருகிறதாம்.தற்போது வரை யானை படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

No posts to display