Monday, April 15, 2024 11:40 am

சுத்தமாக விஷால் அழைப்பை முழுவதுமாக துண்டித்த அஜித் !! அஜித்திடம் உங்க பருப்பு வேகாது..!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமாருடன் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார், மேலும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், ‘லத்தி’ படத்தில் விஷாலின் அறிமுகக் காட்சி தீவிரமான ஒன்றாக இருக்கும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்று நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நட்ச்சத்திர கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் வசூல் செய்ய விஷால் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் முடிவு செய்த போது, எதற்காக மக்களிடம் வசூல் செய்ய வேண்டும் நடிகர்கள் அனைவரும் நிதி உதவி செய்து கட்டிடம் கட்டலாம் என அஜித் கலை நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டதாக கூறப்பட்டது.

பின்பு நடந்த கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் மக்கள் புறக்கணித்ததை தொடர்ந்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாண்டவர் அணியினர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஷால், சென்னைக்கு வரும் மக்கள் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதை போல நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்வையிடுவார்கள்.

அந்த அளவிற்கு நாங்கள் நடிகர்சங்க கட்டிடத்தை கட்டுவோம். அதை கட்டுவதற்கு மேலும் 20 கோடிக்கு மேல் பணம் தேவைப்படுகின்றது..அதற்காக நாங்கள் கௌரவ பிச்சை எடுத்தாவது வேலைகளை விரைவில் முடிப்போம் என நடிகர் விஷால் பேசியிருந்தார். அதாவது மீண்டும் கலை நிகழ்ச்சி என நடத்தி மக்களிடம் வசூல் செய்து கட்டிடம் கட்ட இருப்பதை தான் பிச்சை எடுத்தாவது வேலைகளை முடிப்போம் என விஷால் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

இதற்கு பொது மக்கள் மற்றும் சினிமா துறையினர் மத்தியிலும் விமர்சனம் எழுந்துள்ளது. மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள், இனி மக்களை ஏமாற்றும் யுக்திகள் நடைபெறாது. 30 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் 12 பேர் உள்ளனர், 50 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் 2 பேர் உள்ளனர், 80 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் 2 பேர் உள்ளனர். 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் 1 நபர் உள்ளார், மேலும் நடிகைகள் 50 லட்சம் முதல் 5 கோடி வரை வாங்கி வருகின்றனர்.

அப்படி இருக்கையில், நடிகர் அஜித் தெரிவித்தது போன்று நடிகர், நடிகைகள் முன் வந்து நிதியளித்தால் போதும் பிரமாண்டமாக நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்து விடலாம், நடிகர் சங்கம் பொருளாளராக இருக்கும் நடிகர் கார்த்திக் 20 கோடி வரை சம்பம் வாங்கி வருகிறார், அவர் போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சுமார் 1 கோடி வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நிதி கொடுத்து உதவலாம்.

இதைவிட்டு விட்டு பிச்சை எடுத்தாவது நடிகர் சங்கம் கட்டிடம் காட்டுவோம் என கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் என மக்களிடம் வசூல் செய்துவிடலாம் என திட்டமிட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்றும், மக்கள் தற்பொழுது விழித்து கொண்டு விட்டார்கள், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நாங்க ஏன் பணம் கொடுக்க வேண்டும் என மக்கள் கேள்வி கேட்டகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கான வேலைகளைத் தொடங்கவுள்ளார், மேலும் இது ஒரு பான்-இந்தியன் படமாகவும் இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்