
ரமேஷ் பி பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ், இமான் இசையமைக்கும் இந்த ஃபேன்டஸி காமெடி படத்திற்கு யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஏ.ஆர்.மோகன் கவனித்துக் கொள்ள, வெட்டுப் பணிகளை சான் லோகேஷ் கவனித்து வருகிறார்.மறைந்த நடிகர் பாண்டுவின் புகைப்படத்தை பகிர்ந்து பிரபுதேவா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபு தேவா.
பிரபு தேவாவின் நடன திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிரபுதேவா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, மறைந்த நடிகர் பாண்டுவிடம் தன் மகன் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தை பிரபுதேவா பதிவிட்டு, உங்களை மிஸ் செய்கிறேன்.
நேற்று முதல் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டிற்கும் புகைப்படமும் பதிவும் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரபுதேவாவை போல தாடியுடன் இருக்கும் அவரின் மகனை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.