Monday, April 22, 2024 1:25 pm

உண்மையிலேயே ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த உடனே பல தரப்பிலிருந்து நான் தான் அவரது மகன் என்று சொத்துக்கு உரிமை கொண்டாட வழக்கு தொடுத்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது அண்ணன் ஜெயக்குமார் வாரிசுகளான ஜெ தீபா மற்றும் தீபக் ஆகியோர்தான் வாரிசு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தற்பொழுது மற்றொரு பிரச்சனை உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் வியாசர்புரத்தை சேர்ந்தவர்தான் வாசுதேவன். தற்பொழுது இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில், ஜெயலலிதாவின் தந்தையான ஜெயராமின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நான் என்று கூறியுள்ளார்.

இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா. முதல் மனைவிக்கு பிறந்த நான் இவர்களது மூத்த அண்ணன் என்று கூறியுள்ளார். அதனால் ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கு 50 சதவீதம் உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களில் ஐந்து சதவீதம் பங்குதாரக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது தாயார் உயிருடன் இருக்கும் பொழுது ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக வேதவள்ளி ஜெயக்குமார் ஜெயலலிதா ஆகியோர் இருந்ததையும் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதிமுகவின் தலைமை ஏற்பது யார் என்று சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், நான்தான் அண்ணன் எனக்கு சொத்தில் பங்கு கொடுங்கள் என்று மற்றொரு பிரச்சனையும் கிளம்பியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்