விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

0
விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் குலுகுலு. வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் குலுகுலு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் விரைவில் பாடல்கள் மற்றும் டீசர் போன்றவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

குலு குலு படத்துக்குப் பிறகு சந்தானம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது.

No posts to display