விஜயை வைத்து அட்லீ போடும் புதிய கணக்கு !!அடுத்த லோகியாக மாறும் அட்லீ

0
விஜயை வைத்து அட்லீ போடும் புதிய கணக்கு !!அடுத்த லோகியாக மாறும் அட்லீ

ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் வேட்டை நடத்தின. இதனால் அட்லி தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவரானார்.

இந்நிலையில் தற்போது அவர் யாரும் எதிர்பாராத நிலையில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் 25 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த படத்தில் விஜய் ஒரு நாள் மட்டும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுபோலவே படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான ராணா விலகிவிட விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

No posts to display