சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

0
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘மாநாடு’ என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து. மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படமும் நல்ல வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தபடத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வழக்கம்போல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே உலகநாயகன் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வரும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் ரிலீஸ் செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் செப்டெம்பர் 15 அன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display