Friday, April 19, 2024 1:30 pm

கருணாகரன் மற்றும் யோகிபாபு நடித்த பன்னிக்குட்டி படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோ-கீ த்ரில்லரான கிருமியை நமக்கு வழங்கிய பிறகு, அனுசரண் முருகையன் இப்போது தனது அடுத்த படமான பன்னிக்குட்டியை முடிக்கிறார், இது ஒரு பன்றிக்குட்டியைச் சுற்றி வரும் ஒரு முழு நீள நகைச்சுவை, இதில் கருணாகரன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணியில் உள்ளனர். “நான் ஒரு நகைச்சுவையை உருவாக்க விரும்பினேன், இந்த தலைப்பு, எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது, ஏனெனில் அதிக படங்கள் அதைக் கையாளவில்லை, அந்த இடத்தில் இருந்தது. மேலும், ஆண்டவன் கட்டளையை நானும் இணைந்து எழுதியிருந்தேன், அதனால் நகைச்சுவையை ஆராய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது,” என்கிறார் அனுசரண்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த சில படங்களின் கதைகளைப் பார்க்கும் போது, அட, இப்படி ஒரு கதையா என ஆச்சரியப்பட வைக்கும். சில படங்கள் அட, இதெல்லாம் ஒரு கதையா என யோசிக்க வைக்கும். சில படங்கள், அட, இதில் எங்கே கதை இருக்கிறது என கேட்க வைக்கும். இந்த ‘பன்னிக்குட்டி’ மூன்றாவது ரகம்.

‘சுழல்’ என்ற விறுவிறுப்பான இணையத் தொடரின் சில பகுதிகளை இயக்கிய அனுசரண் தான் இந்த ‘பன்னிக்குட்டி’ படத்தையும் இயக்கியுள்ளார் என்பதை நம்ப முடியவில்லை. இரண்டு மணி நேரப் படத்திலும் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் இல்லை என்பது வியப்பாக உள்ளது.

அடிக்கடி தற்கொலை செய்து தோற்றுப் போகிறவர் கருணாகரன். சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி பைக் ஒன்றைத் திருடுகிறார். அந்த பைக்கில் போகும் போது பன்றி மீது இடித்துவிடுகிறார். மீண்டும் அந்தப் பன்றி மீது இடித்தால் தான் கருணாகரனுக்கு நல்லது நடக்கும் என்கிறார் சாமியார். அந்தப் பன்றி எங்கிருக்கிறது என்று நண்பர்களுடன் தேடுகிறார் கருணாகரன். பன்றி கிடைத்ததா ?, சாமியார் சொன்னது போல பன்றி மீது மீண்டும் இடித்தாரா என்பதுதான் இந்தப் படத்தில் கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கருணாகரன், யோகி பாபு, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, திண்டுக்கல் லியோனி என ஆறுவர் கூட்டணி படம் முழுவதும் இருந்தும் அருமையான நகைச்சுவையைத் தராமல் அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். இதோ, சிரிக்க வைப்பார்கள், அதோ சிரிக்க வைப்பார்கள் என கடைசி வரை காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

கருணாகரன் ஜோடியாக நடித்துள்ள லட்சுமிப்ரியா, நடிகை சுனைனாவின் தங்கை போலவே இருக்கிறார். காமெடிதான் இல்லை, இவர்கள் காதல் காட்சியையாவது கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம்.

நகைச்சுவைப் படம் எனச் சொல்லி இசையமைப்பாளர் கே–வை அழைத்து வந்திருப்பார்கள் போலும். அவரும் என்னதான் செய்வார். மதுரை பக்கத்து கிராமம்தான் கதைக்களம். அதை யதார்த்தமாகக் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன் உழைத்திருக்கிறார்.

எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த படங்கள் இந்த ஆண்டில் நிறையவே வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் இந்தப் படமும்.

பன்னிக்குட்டி – பண்ணிட்டீங்க…சிங்கம் புலி, ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி மற்றும் டி.பி.கஜேந்திரன். கிருமிக்கு இசையமைத்த கே இப்படத்திற்கும் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்