விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்காக கமல் வாங்க கூடிய சம்பள தொகை எத்தனை கோடி தெரியுமா ?

0
விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்காக கமல் வாங்க கூடிய சம்பள தொகை எத்தனை கோடி தெரியுமா ?

கமல்ஹாசனின் கமர்ஷியல் அதிரடி நாடகத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், செம்பன் வினோத், காயத்ரி மற்றும் காளிதாஸ் ஜெயராம் போன்ற திறமையான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றி, அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல், இந்திய சினிமாவையே அதிர வைத்து விட்டது. கமர்சியல் ஹீரோ உலக நாயகன் யார் என்பதை இந்த திரைப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் நிரூபித்து விட்டார் என்ற கூறலாம்.

இத்திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. ஆதலால் தயாரிப்பாளர் கமலுக்கு இதில் பெரிய லாபம் தற்போது வரை வந்து கொண்டு இருக்கிது. தற்போது வெளியான தகவலின் படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் ஆகும் ஹீரோ பட்டியலில் கமல் தான் முதலிடத்தில் இருக்கிறாராம்.

vikram

அதாவது, விக்ரம் திரைப்படத்திற்கு தான் தயாரிப்பாளர் என்பதால், அதன் மூலம் வரும் வருவாயில் ஒரு பங்கை நடிகர் கமலஹாசனுக்கு, தயாரிப்பாளர் கமலஹாசன் ஒதுக்கி விட்டார். விக்ரம் திரைப்படத்தில் கமலின் சம்பளத்தை 130 கோடியாக உயர்ந்து விட்டது. தற்போது கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி என அதில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

vikram movie

ஆதலால், அடுத்து வரும் தயாரிப்பாளர்கள் அந்த சம்பளத்தை மனதில் வைத்து கொண்டு அடுத்த படத்திற்கு புக் செய்ய முடியும். இது விஜயின் ஐடியா என்கிறது திரையுலகம்.

ஆம், விஜய் 40 முதல் 50 கோடிகள் சம்பளம் வாங்கி கொண்டிருந்த நேரம், அப்போதுதான் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ மாஸ்டர் திரைப்படத்தை தயாரிக்க இருந்தார். அந்த சமயம் சேவியர் பிரிட்டோவிடம் எனது சம்பளம் 80 கோடி என்று கணக்கில் வரவு வைத்து விடுங்கள் என்று கூறிவிட்டாராம். அப்போதுதான் 80 கோடி சம்பளத்தை தாண்டி அடுத்த படத்தில் கேட்க முடியும் என்பது விஜயின் பக்கா ஐடியாவாம். அது போலவே தற்போது அவர் வாரிசு படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கியதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

No posts to display