நடிகர் விக்ரமின் தற்போதைய உடல் நிலை குறித்து வெளியான மருத்துவமனை அறிக்கை இதோ !!

0
நடிகர் விக்ரமின் தற்போதைய உடல் நிலை குறித்து   வெளியான மருத்துவமனை அறிக்கை இதோ !!

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் விக்ரம், ஏராளமான தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், விக்ரம் விரைவில் குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து வெளியான விளக்கத்தில், இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த விக்ரம் நேற்று அசௌகரியாக உணர்ந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டனர், தற்போது பூரண குணமடைந்து வருகிறார். பெரும்பாலும் நாளை வீடு திரும்பிவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே தகவலை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவமனை தரப்பிலிருந்தும் அறிக்கை வெளியாகியுள்ளது.

No posts to display