இந்த ஒரு காரணத்தினால் தான் விஜய்யுடன் நடிக்க மறுத்த அஜித்.. பல வருடம் கழித்து கசிந்த உண்மை

0
இந்த ஒரு காரணத்தினால் தான் விஜய்யுடன் நடிக்க மறுத்த அஜித்.. பல வருடம் கழித்து கசிந்த உண்மை

விஜய், அஜித் என்று இந்த இரு நடிகர்களுக்கும் தனித்தனியாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரையரங்குகளில் இவர்கள் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருக்கின்றனர். மேலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த இரு ரசிகர்கள் இடையே கடுமையான சண்டை வருகிறது.

ஆனால் விஜய், அஜித் இருவருமே நல்ல நண்பர்களாக தற்போது வரை பழகி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்திலும் நடித்துள்ளார். அதாவது 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய் ஹீரோவாகவும், அஜித் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து நேருக்கு நேர் படத்தில் விஜயும், அஜித்தும் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அஜித்துக்கு பதிலாக சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நேருக்கு நேர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

ஆனால் அஜித் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தற்போது வரை ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தாமு அளித்த பேட்டியில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித்தை வைத்து ஃபர்ஸ்ட் ஷெட்யூல் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகுதான் அஜித்தை படத்தில் விலகிவிட்டார். அதற்கு தாமு, அஜித் விலகியதற்கு டேட்டா, ரேட்டா என தெரியவில்லை. உண்மை தெரியாமல் நாம் எதுவும் சொல்லக்கூடாது என பதிலளித்தார். அதாவது அஜித்தின் கால்ஷீட் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது சம்பள பிரச்சினையாக இருக்கலாம் என தாமு கூறியுள்ளார்.

ஆனால் ராஜாவின் பார்வையிலே படத்திற்குப் பிறகு தற்போது வரை விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் தற்போது வெங்கட்பிரபு தனது மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை அஜித், விஜய்யை வைத்து எடுக்க உள்ளதாக கூறிவருகிறார்.

No posts to display