ஆட்டத்தை ஆரமித்த அஜித் AK61 படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகர் நீங்களே பாருங்க !!

0
ஆட்டத்தை ஆரமித்த அஜித் AK61 படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகர் நீங்களே பாருங்க !!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித் தற்பொழுது ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நகரங்கள் மற்றும் ஷொப்பிங் மால் – களுக்குச் சென்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

மேலும் அவர் ஐரோப்பவில் இருந்து வந்ததும் இடை நிறுத்தப்பட்டிருந்த AK61 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தின் முதற் கட்டப்படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் ஆரம்பித்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி, AK 61 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரசிகருடன் சமுத்திரக்கனி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படங்கள் மூலம் இது உறுதி ஆகியுள்ளது. நடிகர் அஜித் படத்தில் முதல்முறையாக சமுத்திரக்கனி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display