அசால்ட்டாக கோலி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா.! இவர்கள் இருவரையும் ஓவர்டெக் செய்த பாகிஸ்தான் கேப்டன்.

0
அசால்ட்டாக கோலி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா.! இவர்கள் இருவரையும் ஓவர்டெக் செய்த பாகிஸ்தான் கேப்டன்.

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் விளையாடினர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை அடைந்த இந்திய அணி பழி தீர்க்கும் வகையில் இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாட ஆரம்பித்தது.

மூன்று ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று இரவு 10.30 மணி அளவில் தொடங்கியது.மேலும் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 24 ரண்களில் ஆட்டத்தை இழந்தார். இதுவே கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு 29 வது இன்னிங்ஸ் ஆகும் இந்த 29 வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 1000 ரண்களை குவித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னாள் கேப்டனான கோலி 30 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் கடந்தார் அதை வெறும் 29 இன்னிங்ஸில் முறியடித்தால் ரோஹித் சர்மா. ஆனால் இவர்கள் இருவரை விட பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 24 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display