திருமணம் முடிந்த கையோடு ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

0
திருமணம் முடிந்த கையோடு ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயந்தாரா மற்றும் முன்னணி நடிகரான ஜெயம் ரவி இருவரும் இரண்டாவது முறையாக இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வளர்ந்து கொண்டிருக்கும் நயந்தாரா மற்றும் ஜெயம் ரவி இவர்களின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

இவர்களின் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தனி ஒருவன். இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் மீண்டும் எப்பொழுது திரைப்படம் வெளிவரும் என்று மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள்.

இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகிவுள்ளது. இவ்வாறு இவர்கள் இணையுள்ள புதிய திரைப்படத்தில் இயக்குனர் அஹமத் இயக்கவுள்ளார்.

இந்த தகவலை ஜெயம் ரவி நேர்காணலின்போது கூறியுள்ளார்.நிலையும் படம் திரில்லர் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் படக்குழுவினர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி வரலாற்றை காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ராஜாவாக நடித்து வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

நடிகை நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடிக்காமல் விக்னேஷ் சிவனுடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

No posts to display