அம்மோவ் கேப்டன் மில்லர் படத்தின் மொத்த பட்ஜெட் எத்தனை கோடிகள் தெரியுமா.? மிரண்டு போன கோலிவுட்.!

0
அம்மோவ் கேப்டன் மில்லர் படத்தின் மொத்த பட்ஜெட் எத்தனை கோடிகள் தெரியுமா.? மிரண்டு போன கோலிவுட்.!

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற இருமொழி படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கான பணியை விரைவில் தொடங்கவுள்ளார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2021 இல் ‘ராக்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார், மேலும் அவர் ‘சாணி காயிதம்’ படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவவேற்பை பெற்றது. அதில் தனுஷ் அட்வெஞ்சர் பைக்கில் பின்னை துப்பாக்கியை போட்டுகொண்டு கெத்தாக வருவது போல கட்டப்பட்டிருக்கும்.

இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான லுக்கில் தனுஷ் இருந்ததால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. படத்தில் தனுஷ் மூன்று வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் உலாவி வருகிறது. அது என்னவென்றால், இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளதாம்.

1930-40களின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் இப்போது தனது தி கிரே மேன்’, ‘திருச்சித்திரமப்லம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

No posts to display