நாளை முதல் நடிகர் தனுஷ் படம் இந்த படம் திரையரங்கில் வெளியாகிறது..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

0
நாளை முதல் நடிகர் தனுஷ் படம் இந்த படம் திரையரங்கில் வெளியாகிறது..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் படத்தின் திரைக்கதை எழுத, அப்பா கஸ்தூரிராஜா படத்தை இயக்கினார்.

இப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் 2002ம் ஆண்டு வெளியான இப்படம் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் வெளியாகவுள்ளது. துள்ளுவதோ இளமை திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை நாளை வெளியிடுகிறது. சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியாகிறது.

தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’, ‘திருச்சித்திரமபலம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அவர் நடித்த ‘நானே வருவேன்’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் உள்ளது, மேலும் இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வெங்கி அட்லூரியுடன் இருமொழிப் படமான ‘வாத்தி’ படப்பிடிப்பை முடித்த தனுஷ், அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்.

No posts to display