இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் இன் அனல் பறக்கும் பேச்சு !!

0
இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின்  இன் அனல் பறக்கும் பேச்சு !!

‘வலிமை’ படத்திற்குப் பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை வங்கி திருட்டு என கூறப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. அஜித் தனது ஐரோப்பா பயணத்திலிருந்து இந்தியா திரும்பிய பிறகு படக்குழுவினர் விரைவில் புனேயில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

அப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கிற்கு ப்ரேக் விட்டுள்ள நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் அஜித் பொதுவாக அவரின் திரைப்படங்களின் ப்ரோமோஷன்-ல் கலந்து கொள்ளவதை தவிர்த்து வருபவர், அவர் அப்படி கடைசியாக அவரின் திரைப்பட நிகழ்ச்சிகாக கலந்து கொண்டது எப்போது என்றால் பில்லா திரைப்படத்தின் போது தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியானது பில்லா, ரீமேக்காக உருவானாலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து.

மேலும் அப்போது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா படக்குழு பிரஸ் மீட் நடத்தியுள்ளது, அதில் கலந்து கொண்ட அஜித் பில்லா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் கடைசியாக தனது திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது அதுவே கடைசி என சொல்லப்படுகிறது.

அந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

No posts to display