தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முழு கதை இதுவா ? கதறும் விஜய் ரசிகர்கள்

0
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் முழு கதை இதுவா ? கதறும் விஜய் ரசிகர்கள்

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் தனது அடுத்த படமான ‘வரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார், மேலும் படத்தின் மூன்றாவது ஷெட்யூலை சமீபத்தில் சென்னையில் முடித்துள்ளனர் படக்குழு. ‘வரிசு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சினிமா தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் முதல் பார்வை, மற்றும் படத்தின் பெயர் வெளியானதுமே இணையத்தில் பலரும் ஒவ்வொரு போட்டோவாக ஷூம் செய்து பார்த்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பலர் படம் ஹிட்டாகுமா, பிளாப் ஆகுமா என்றெல்லம் கணிக்க ஆரம்பித்து விட்டனர். அப்படிதான், வாரிசு திரைப்படம் “லார்கோ வின்ச்” புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

தளபதிவிஜய் மிகப்பெரிய தொழிலதிபரின் ரகசிய மகனாக வருகிறாராம். அவரின் அப்பாவை வில்லன்கள் கொன்று விடுவராம். அதன் பிறகு ரகசிய வரிசான விஜயையும் வில்லன் கூட்டம் கொலை செய்ய முயற்சிக்கின்றது. அதிலிருந்து விஜய் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் வாரிசு கதை.

Thalapathy 66

ஏற்கனவே இதே பணியில் வெளியான பிரபாஸின் சாஹோ, பவன் கல்யாண் நடித்த அக்னியதவசி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தால், விஜயின் வாரிசு படமும் தோல்வியடைந்து விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இன்னும் படத்தின் டீசர், ட்ரைலர் கூட வரவில்லை. அப்படி ட்ரைலர் சுமாராக இருந்தும் படம் நன்றாக ஓடிய கதை கூட இங்கு நடந்துள்ளது. ஆனால், போஸ்டர் வைத்து கதை கூறி படம் பிளாப் ஆகும் என இணையவாசிகள் கூறுவது சினிமாவாசிகளுக்கு வேடிக்கையாக இருக்கிறது.

Thalapathy 66

ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வரிசு’ அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிடப்பட்டன, மேலும் மூன்று வெவ்வேறு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, அதே சமயம் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் பல பிரபல நட்சத்திரங்களுடன் முன்னணி பெண்ணாக நடிக்கிறார்.

No posts to display