அம்மோவ் ‘புஷ்பா 2’ படத்துக்காக மொத்தமாக தேதிகளைக் அள்ளி கொடுத்த பிரபல நடிகர்! இதுவரை கொடுக்காத முக்கியதுவம்

0
அம்மோவ் ‘புஷ்பா 2’ படத்துக்காக மொத்தமாக தேதிகளைக் அள்ளி கொடுத்த பிரபல நடிகர்! இதுவரை கொடுக்காத முக்கியதுவம்

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. வசூலிலும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா தி ரூல்’ உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் ‘புஷ்பா 2’ கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே வந்த பஹத் ஃபாசில் கதாபாத்திரம், அடுத்த பாகத்தில் அதிகளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மொத்தமாக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் பஹத் ஃபாசில். இதுவரை இத்தனை நாட்களை அவர் எந்த படங்களுக்கும் கொடுத்ததில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை படக்குழுவினர் அணுகி இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் விஜய் சேதுபதி, வில்லன் சேதுபதி ஆகிவிடுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

No posts to display