அஜித் காதலித்த மகேஸ்வரியா இது? மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படியொரு உறவா…

0
அஜித் காதலித்த மகேஸ்வரியா இது? மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படியொரு உறவா…

தமிழ் சினிமாவில் தி லிஜெண்ட்ரி இயக்குனராக திகழ்ந்து வரும் பாரதிராஜா பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அதேபோல் பல நட்சத்திரங்கள் அறிமுகமாகி கொடுக்கட்டி பறக்கும் நிலையை உருவாக்கி தந்தவரும் அவர்தான்.

அந்தவரிசையில் 1994ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் கருத்தம்மா. இப்படத்தின் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை மகேஷ்வரி. இப்படத்தில் கிடைத்த வரவேற்பு, அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

பின் நடிகர் அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அதன்பின், என் உயிர் நீதானே, ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்த மகேஷ்வரி 2000 ஆம் ஆண்டில் இருந்து நடிகை ஸ்ரீதேவிக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

பின் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உறவினராகவும் இருந்து அவருடன் பல படங்களில் ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இதைதொடர்ந்து 2008ல் ஜெயகாந்தன என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாமல் மாறிய மகேஷ்வரியின் புகைப்படத்தை அவரா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

No posts to display