சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

0
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

சென்னையின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், அசோக் பில்லர், அயனாவரம், கிண்டி, தி.நகர், அடையாறு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்.

புறநகர் பகுதிகளான மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், கரையாஞ்சாவடி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

வெப்பநிலை குறைவதோடு அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று திணைக்களம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

No posts to display