யப்பா.. போடுடா வெடிய 🔥 தல 61 அலப்பறை ஆரம்பம் Ak 61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!

0
யப்பா.. போடுடா வெடிய 🔥 தல 61 அலப்பறை ஆரம்பம் Ak 61 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி! வெளியானது புதிய தகவல்!

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் உள்ள தனது நண்பர்களுடன் விடுமுறையில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, லண்டன் முழுவதும் அவரது பைக் பயணத்தின் நடிகரின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. எச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பா முழுவதும் சாலைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் அஜித், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவருகிறதாம்.

கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கும் இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில படங்களைப் போல அல்லாமல் இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இப்படம் தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி அஜித் -61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாம். அதேபோல இப்படம் இவ்வாண்டு இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.

வினோத்- அஜித்- போனிகபூர் கூட்டணியில் வெளிவந்த முந்தைய படங்களுக்கு நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை எனப் பெயரிடப்பட்டிருந்தது. தற்போது உருவாகிவரும் இப்படத்துக்கு வல்லமை எனத் தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுவருகிறது. அதே தலைப்பையே வைப்பார்களா அல்லது பான் -இந்தியா ரிலீஸைக் கருத்தில் கொண்டு வேறு ஏதேனும் மற்றுவார்களா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

இப்படத்தையடுத்து நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் தனது ரசிகர் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மற்றொரு வீடியோ வைரலாக பரவியது. ‘ஏகே 61’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இம்மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், லண்டனில் விடுமுறை முடிந்து அஜித் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏகே 61’ படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No posts to display